சோழவந்தான்: சாலை பணிகளுக்கான பூமி பூஜை

81பார்த்தது
சோழவந்தான்: சாலை பணிகளுக்கான பூமி பூஜை
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மன்னாடி மங்கலத்தில், 5 கிமீ தூரம் ரூ. 2.65 கோடி மதிப்பீட்டிலான சாலைப் பணிகளுக்கு எம்.எல்.ஏ வெங்கடேசன் தலைமையில் பூமி பூஜை இன்று (பிப்.20) நடைபெற்றது. இதில் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் பசும்பொன் மாறன், பேரூர் செயலாளர் சத்தியபிரகாஷ், பேரூராட்சி தலைவர் ஜெயராமன், பொதுக்குழு ஸ்ரீதர், விவசாய அணி முருகன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள் ரேகா வீரபாண்டி, வசந்த கோகிலா சரவணன், கிளை செயலாளர் திருமுருகன் உள்ளிட்ட நிர்வாகிகள், உதவி பொறியாளர் கௌதம் உள்ளிட்ட நெடுஞ்சாலை துறையினர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி