திருநங்கைகள் சுயதொழில் செய்ய கடன் உதவி

78பார்த்தது
திருநங்கைகள் சுயதொழில் செய்ய கடன் உதவி
தர்மபுரியில் ஜூன் 21ஆம் தேதி திருநங்கைகளுக்கு சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் சாந்தி வெளியிட்ட தகவலில், “திருநங்கை நலவாரியத்தில் திருநங்கைகளின் பதிவு எண்ணிக்கை அதிகரிக்க தர்மபுரியில் வரும் 21ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை சிறப்பு முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் ஆதார் அட்டை திருத்தம், அடையாள அட்டை பதிவு செய்தல், குடும்ப அட்டை, சுயதொழில் செய்ய கடன் போன்றவை வழங்க ஏற்பாடு செய்யப்படும்.” என்றார்.

தொடர்புடைய செய்தி