பொதுவிநியோக திட்டத்தின் கீழ் மசூர் பருப்பை கொள்முதல் செய்யக் கோரிய வழக்கில், "தமிழக மக்கள் மசூர் பருப்பைவிட துவரம் பருப்பையே அதிகம் விரும்புகின்றனர். எதிர்காலத்தில் தேவை ஏற்பட்டால் மசூர் பருப்பும் கொள்முதல் செய்யப்படும்" என்ற வாதத்தை தமிழ்நாடு அரசு முன் வைத்தது. இந்நிலையில், பொதுவிநியோக திட்டத்தில் எந்த அடிப்படையில் துவரம் பருப்பு கொள்முதல் செய்யப்படுகிறதென 2 வாரங்களில் விளக்கமளிக்க தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.