சென்னை மெட்ரோ ரயில் பயணிகளுக்கு அறிவிப்பு

53பார்த்தது
சென்னை மெட்ரோ ரயில் பயணிகளுக்கு அறிவிப்பு
பக்ரீத் பண்டிகையையொட்டி சென்னையில் நாளை (ஜூன் 17) சனிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி, காலை 8-11 மணி வரை; மாலை 5-8 மணி வரை 6 நிமிட இடைவெளியிலும், காலை 5-8 மணி; பகல் 11 முதல் மாலை 5 மணி வரை 7 நிமிட இடைவெளியிலும் இரவு 10 -11 மணி வரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்” என அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் பலரும் தங்களது தினசரி பயணத்தை மெட்ரோவில் மேற்கொண்டு வரும் நிலையில் முன்னதாகவே இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி