காத்திருப்புப் பட்டியல்களுக்கு முற்றுப்புள்ளி: இந்திய ரயில்வே

56பார்த்தது
காத்திருப்புப் பட்டியல்களுக்கு முற்றுப்புள்ளி: இந்திய ரயில்வே
ரயில் பயணிகளுக்கு மிகப்பெரிய தலைவலியாக இருப்பது காத்திருப்பு பட்டியல் தான். இந்த சிக்கலை முடிவுக்கு கொண்டு வர ரயில்வே துறை நடவடிக்கைகளை எடுக்க இருக்கிறது. 2031-32க்குள் இந்த பிரச்னையை தீர்க்க இலக்கு நிர்ணயித்துள்ளதாக ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது. 2032ஆம் ஆண்டுக்குள் அனைத்து பயணிகளும் காத்திருக்காமல் இருக்கைகளைப் பெறுவதற்கான திட்டங்கள் உருவாக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. பாதுகாப்பு மற்றும் உள்கட்டமைப்பில் சமரசம் செய்து கொள்ளாமல் திட்டங்களை தீட்ட அதிகாரிகளை ரயில்வே அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி