உனக்கு 80 எனக்கு 23.. முதியவரை கரம்பிடித்த இளம்பெண்

61பார்த்தது
உனக்கு 80 எனக்கு 23.. முதியவரை கரம்பிடித்த இளம்பெண்
சீனாவின் ஹெபெய் மாகாணத்தில் வசித்து வருபவர் 80 வயதான லீ. இவர் அங்குள்ள முதியோர் இல்லத்தில் வசித்து வந்த நிலையில், அங்கு பணிபுரியும் 23 வயது சியாபங் என்ற இளம்பெண்ணுடன் பழகி வந்துள்ளார். ஆரம்பத்தில் இருவரும் நண்பர்களாக பழகி வந்த நிலையில், இறுதியில் இருவரும் காதல் வலையில் விழுந்தனர். இதையடுத்து திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தபோது, சியாபங் வீட்டில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், முதியவர் லீ மீது அளவு கடந்த அன்பு வைத்திருந்த சியாபங், பெற்றோர் வேண்டாம் என்று கூறிவிட்டு, அவர் கனவு கண்டபடி, முதியவர் லீயை எளிய முறையில் திருமணம் செய்து கொண்டார்.

தொடர்புடைய செய்தி