திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே நிலத்தகராறு காரணமாக மூதாட்டியை கட்டையால் தாக்கும் அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது. நான்கு செண்ட் நிலத்திற்காக மூதாட்டிக்கும் அவரது உறவினர்களுக்கும் இடையே தகராறு இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் இன்று நிலத்திற்கு டிராக்டருடன் சென்ற மூதாட்டியை ஒருவர் உருட்டுக்கடையால் சரமாரியாக தாக்கினார். இதில், பலத்த காயமடைந்த மூதாட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.