ஊத்தங்கரையில் கை குழந்தைகளுடன் சாலை மறியல்..

80பார்த்தது
ஊத்தங்கரை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பாஜக சார்பில் நிவாரணம் வழங்க முன் பதிவு சீட்டு கொடுத்து வரவழைத்தனர். ஆனால் முன்பதிவு சீட்டு இல்லாமல் ஏராளமானோர் வந்ததால், அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது, இதனால் நிவாரணம் கொடுக்காமல் பா.ஜ.க வினர் திரும்பி சென்று விட்டனர். ஆத்திரமடைந்த பாதிக்கப்பட்ட பொதுமக்கள் எங்களை தரக்குறைவாக பேசி திரும்பி சென்றதாக கூறி சாலை மறியலில் ஈடுபட்டனர். 

தகவல் அறிந்து வந்த ஊத்தங்கரை காவல்துறையினர் காவல் துணை கண்காணிப்பாளர் சீனிவாசன் பொதுமக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்திய பின் கலைந்து சென்றனர். இதனால் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்தி