பஞ்சாப்பில் தமிழ்நாடு கபடி வீராங்கனைகள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர். யாரும் அச்சப்படவோ வதந்திகளை பரப்ப வேண்டாம் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். தகவல் தெரிய வந்ததும் உடனடியாக அங்குள்ள மாவட்ட ஆட்சியரை தொடர்பு கொண்டு, மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்தோம். இன்றைக்கே அவர்களை டெல்லி அழைத்துச் சென்று, அங்குள்ள தமிழ்நாடு ஹவுஸில் தங்கவைக்கப்பட்டு, உரிய வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்கள் என கூறியுள்ளார்.