மகாராஷ்டிராவின் புனேவில் நேற்று (ஜன.24) ஒரு அதிர்ச்சியூட்டும் விபத்து நடந்துள்ளது. புனேவின் புறநகரில் உள்ள ஹின்ஜேவாடி பகுதியில் உள்ள சக்ரே பாட்டீல் சௌக்கில் பிற்பகல் 3.30 மணியளவில் ஒரு கான்கிரீட் கலவை லாரி கவிழ்ந்தது. அந்த நேரத்தில், இரண்டு பெண்கள் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தனர். அவர்கள் மீது அந்த கான்கிரீட் கலவை லாரி விழுந்தது. இதனால், இரண்டு பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.