புரட்டாசி மாத 2-வது திங்கட்கிழமை சோமவார தேய்பிறை பிரதோஷம் முன்னிட்டு இன்று செப்-30ம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள அரசம்பட்டி தென்னீஸ்வரன் கோவிலில் மூலவர் தென்னீஸ்வரன், நந்தி பகவானுக்கும் வாசனை திரவியங்களால் அபிஷேகம், அலங்காரம் பூஜைகள் செய்து செய்யபட்டு மகா தீபாரதனை காண்பிக்கபட்டது. இதில் ஏராயமான பக்கதர்கள் கலந்துக்கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கபட்டது.
தேவர்கள், முனிவர்கள், ரிஷிகள், சித்தர்கள் உள்ளிட்ட அனைத்து தெய்வங்களும் சிவ பெருமானை பூஜை செய்து வழிபட்டு, வேண்டிய வரங்களை நெறும் வேளை பிரதோஷ வேளையாகும். எப்படிப்பட்ட தோஷங்களையும், துன்பங்களையும், பாவங்களையும் போக்கி, வாழ்வில் சந்தோஷங்களை வழங்கக் கூடிய சக்தி பிரதோஷ விரதத்திற்கு உண்டு. தொடர்ந்து 12 ஆண்டுகள் பிரதோஷ விரதம் இருந்து சிவனை வழிபட்டால், அவர்களுக்கு சிவலோக பதவி கிடைக்கும் என்பது நம்பிக்கை.