தோனியின் சாதனையை முறியடித்த விராட் கோலி

68பார்த்தது
தோனியின் சாதனையை முறியடித்த விராட் கோலி
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக முறை களமிறங்கிய இந்திய வீரர்கள் பட்டியலில், முன்னாள் கேப்டன் தோனியை பின்னுக்குத் தள்ளி விராட் கோலி இரண்டாம் இடத்துக்கு முன்னேறியுள்ளார். பெங்களூருவில் இன்று நடைபெறும் நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் இடம்பிடித்துள்ள அவர் இச்சதானையை நிகழ்த்தியுள்ளார். இது கோலியின் 536-வது சர்வதேச போட்டியாகும். தோனி 535 போட்டிகளுடன் 3-ம் இடத்தில் உள்ளார். இப்பட்டியலில் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர்(664 போட்கள்) முதலிடத்தில் நீடிக்கிறார்.

தொடர்புடைய செய்தி