ஓசூர் அருகே பெண் தூக்கிட்டு தற்கொலை
கிருஷ்ணகிரி மவட்டம் ஓசூர் அடுத்துள்ள மிடிகிரிப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன். இவருடைய மனைவி ஜெயந்தி (47). இவரது கணவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. இதனால் அடிக்கடி குடும்பத்தில் பிரச்சினை வந்துள்ளது. அதனால் மனமுடைந்த ஜெயந்தி கடந்த 7-ம் தேதி அன்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மத்திகிரி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.