கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி ஊராட்சி ஒன்றியக்குழு சிறப்பு கூட்டம் நேற்று வட்டார வளர்ச்சி அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. ஒன்றியக் குழு தலைவர் லாவண்யா தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் உமாசங்கர் முன்னிலை வகித்தார். இதில் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர், கழிவுநீர் கால்வாய், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நிறை வேற்றுவது குறித்து விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில், ஒன்றிய கவுன்சிலர் கள், அலுவலர்கள், பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.