கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள டி. புதூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அவர் மாணவர்களிடம் பாடங்கள் குறித்து கேட்டறிந்தார். அனைவரையும் நன்றாக படிக்க வேண்டும், உயர்ந்த இடத்திற்கு வர வேண்டும் என வாழ்த்தினார். கொண்டனர். இந்த ஆய்வின் போது எம்எல்ஏ-க்கள் பிரகாஷ், ராமச்சந்திரன், மாவட்ட கல்வி அலுவலர் ( பொறுப்பு) முனிராஜ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.