கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அடுத்துள்ள அண்ணியாளம் கிராமத்தில், கல்குவாரிக்கு செல்லும் சாலையில் நேற்று முன் தினம் இரவு அந்த வழியாக லாரிகள் சென்று கொண்டிருந்தது. அப்போது அப்போது லாரியின் முன்பாக திடீரென சிறுத்தை ஒன்று அங்கிருந்த பாறை இடுக்கில் இருந்து சாலையை கடந்து சென்றது. இதனை லாரியில் சென்றவர்கள் செல்போன் மூலம் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.