ஓசூர்: வழக்கறிஞருக்கு சரமாரி வெட்டு!

61பார்த்தது
கிருஷ்ணகிரி மவட்டம் ஓசூரைச் சேர்ந்த இளம் வழக்கறிஞர் கண்ணன் (30) இவர் இன்று ஓசூரில் உள்ள நீதிமன்றத்திற்கு சென்று விட்டு வெளியே வந்தார். அப்போது மர்ம நபர் ஒருவர் அவரை பின் தொடர்ந்த வந்து கண்ணனை வழி மறித்து தீடீரென தான் வைத்திருந்த கத்தியை எடுத்து சரமாரியாக வக்கீல் கண்ணனை வெட்டினார். பல இடங்களில் வெட்டு காயம்பட்ட அவர் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து விழுந்தார்.

இதனை பார்த்த சகவழக்கறிஞர்கள் ஓடி வந்து அவரை தூக்கிக்கொண்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் வழக்கறிஞரை வெட்டிய மர்ம நபர் அருகில் இருந்த நீதிமன்றத்தில் சென்று சரணடைந்தார். இவரிடம் போலீசார் கொலைக்கான காரணம் குறித்து விசா ரணை நடத்தி வருகின்ற னர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி