தொழிற்சங்கத்தினர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

81பார்த்தது
பெருந்தலைவர் காமராஜரின் 122 வது பிறந்தநாளை முன்னிட்டு ஓசூரில் காமராஜ் காலனியில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் திருவுருவ சிலைக்கு டிவிஎஸ் எம்ப்ளாயீஸ் யூனியன் தலைவர் குப்புசாமி, ஐஎன்டியுசி மாவட்ட தலைவர் முனிராஜ், மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு சங்கம் இளவரசன் ஆகியோர் தலைமையில் தொழிலாளர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

அதனைத் தொடர்ந்து ஓசூர் மகாத்மா காந்தி சாலையில் உள்ள காந்தி சிலை முன்பு காங்கிரஸ் கட்சியினர் காமராஜரின் திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து பூஜைகள் செய்து மரியாதை செய்தனர். அதனைத்தொடர்ந்து ஓசூர் நேதாஜி சாலையில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் காங்கிரஸ் கட்சியினர் காமராஜரின் திருவருவப்படத்திற்கு மலர்கள் தூவி மரியாதை செய்தனர்.

தொடர்புடைய செய்தி