பேரிகையில் பள்ளி மாணவி மாயம்.

68பார்த்தது
பேரிகையில் பள்ளி மாணவி மாயம்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகை அடுத்த ஒரு கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுமி அங்குள்ள பள்ளி ஒன்றில் 10- ம் வகுப்பு படித்து வருகிறார். அந்த நிலையில் இவர் கடந்த 26-ஆம் தேதி பள்ளிக்கு சென்றவர் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை என்று பெற்றோர் ஓசூர் டவுன் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் விசாரணையில் சூளகிரி பகுதியை சேர்ந்த சவுந்தர் (23) என்பவர் மாணவியை கடத்தி சென்றது தெரியவந்தது. இதை அடுத்து போலீசார் சவுந்தர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

தொடர்புடைய செய்தி