கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர், சூளகிரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுற்றுலா மற்றும் பிற பகுதிகளுக்கு என வாடகைக்கு இயக்க கூடிய கார், டெம்போ டிராவலர், பேருந்துகள் என 350க்கும் அதிகமான வாகனங்கள் அதனையே நம்பி உள்ளநிலையில்
தினந்தோறும் தனியார் தொழிற்சாலைகள், கார்மெண்ட்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மாத வாடகைக்கு இயக்கக்கூடிய வாகனங்களும் சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் டூரிஸ்ட்டு வாகனங்களாக குறைந்த கட்டணத்திற்கே அனுமதியின்றி பிற இயக்கி கொள்வதால் தங்களின் வாழ்வாதாரம் பாதிப்பதாகவும் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி 300க்கும் அதிகமான டூரிஸ்ட் வாகன ஓட்டுநர்கள், உரிமையாளர்கள் ஒசூர் வட்டார போக்குவரத்து அலுவலரிடம் மனு அளித்துள்ளனர்.