கிருஷ்ணகிரி ஓசூர் அருகே தனியார் குடியிருப்பு வீட்டில் வெங்கடேஷ், வெங்கடலட்சுமி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் வீட்டில் முன் பக்க கதவை திறந்து வைத்து தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தனர். வனப்பகுதியை விட்டு ஊருக்குள் சுற்றித் திரிந்த சிறுத்தை ஒன்று அப்போது இவர்களது வீட்டின் முன் வாசல் வழியாக வீட்டிற்குள் புகுந்தது.
இதைப் பார்த்த தம்பதியினர் திகைத்துப் போய் வீட்டை விட்டு வெளியேறி முன்பக்க கதவை அடைத்தனர். இதனால் சிறுத்தை வீட்டிற்குள் சிக்கிக் கொண்டது. இத்தகவல் குறித்து அறிந்த பண்ணாரிபேட்டை வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுமார் 4 மணி நேர போராட்டத்திற்குப் பின் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். பின்னர் வனத்துறையினர் சிறுத்தையை மீண்டும் வனத்திற்குக் கொண்டு விட்டனர்.