நீட்தேர்வில் 700 மதிப்பெண்கள் பெற்ற மாணவிக்கு பாராட்டு விழா

50பார்த்தது
ஓசூர் பாகலூர் சாலையில் உள்ள அத்வைத் இன்டர்நேஷனல் அகாடமி சிபிஎஸ்சி பள்ளியில் பிளஸ் டூ படித்து வந்த தீபிகா என்ற மாணவி நீட் தேர்வில் பங்கேற்று மொத்தமுள்ள 720 மதிப்பெண்களில் 700 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் சாதனை படைத்துள்ளார்.

200 மதிப்பெண்கள் பெற்ற மாணவி தீபிகாவிற்கு பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது. பள்ளியின் தாளாளர் அஸ்வத் நாராயணா, பள்ளி முதல்வர் சங்கீதா ராய், துணை முதல்வர் பவானி, அகாடமி இயக்குனர் பானு பிரகாஷ், மற்றும் ஆகாஷ் ஓசூர் கர்நாடகா தலைமை அதிகாரி ரவிகாந்த், ஓசூர் கிளை மேலாளர் தவ்ஷிப் ராஷா கான் உள்ளிட்டோர் சால்வைகள் அணிவித்து பூங்கொத்துகள் வழங்கி பாராட்டுக்களை தெரிவித்தனர். இதில் ஆசிரிய ஆசிரியைகள், ஆகாஷ் நிர்வாகக் குழுவினர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து பேசிய மாணவி, 700 மதிப்பெண்கள் பெறுவதற்கு உறுதுணையாக இருந்த பள்ளி நிர்வாகத்தினர், தாளாளர், ஆசிரிய ஆசிரியைகள் மற்றும் ஆகாஷ் நிறுவனத்தின் முதன்மை அதிகாரிகள் குழுவினர்கள் உள்ளிட்டோருக்கு நன்றிகளை தெரிவித்து கொள்வதாக தெரிவித்தார். அதேபோல பள்ளியின் தாளாளர் அஸ்வத் நாராயணா, மாவட்ட அளவில் தங்கள் பள்ளி மாணவி வெற்றி பெற்றதற்கு அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றிகளை தெரிவிப்பதாக கூறினார்.

தொடர்புடைய செய்தி