ஊத்தங்கரை அருகே பழுதான நிழற்குடம்-பொதுமக்கள் அவதி.

252பார்த்தது
ஊத்தங்கரை அருகே பழுதான நிழற்குடம்-பொதுமக்கள் அவதி.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த புதூர் புங்கனை கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த பகுதியில் கடந்த 2002- 2003-ஆம் ஆண்டு பஸ் நிறுத்த நிழற்குடம் அமைக்கப்பட்டது. கடந்த சுமார் 15 ஆண்டுகளுக்கு மேலாக பயன்பாட்டில் இருந்து வந்துள்ள நிலையில் தற்பொழுது ஒரு சில ஆண்டுகளாக பழுதாகி நிழற்குடம் மேல் பகுதியில் உள்ள சிமெண்ட் பூச்சுகள் கீழே விழுந்து கம்பிகள் தெரியும் அளவிற்கு மிக மோசமாக இடிந்து விழும் அபாய நிலையில் காணப்படுகிறது. பொது மக்களின் நலன் கருதி பழுதான நிழற்குடம் அகற்றிவிட்டு புதியதாக நிழற்குடம் அமைக்க வேண்டும் என அந்த பகுதி மக்களின் எதிர்பார்பாக உள்ளது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி