மும்பை மற்றும் புனேவில் வேகமாக பரவி வரும் ஜிபிஎஸ் என்கிற நோய் சுமார் எட்டு பேரின் உயிரை காவு வாங்கி உள்ளது. பலர் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். ‘கேம்ப்லோபேக்டர் ஜெஜூனி’ என்கிற ஒரு வகை பாக்டீரியா இந்த GBS நோயை தூண்டுவது கண்டறியப்பட்டுள்ளது. இந்த பாக்டீரியா பெரும்பாலும் சரியாக சமைக்கப்படாத இறைச்சிகள் மூலமாகவே பரவுவது தெரிய வந்துள்ளது. இறைச்சிகள் பயன்பாட்டை குறைத்தாலே இந்த நோயிலிருந்து நம்மை பாதுகாக்கலாம்.