ஐபிஎஸ் தம்பதியினரான வருண்குமார் - வந்திதா விவாகரத்து செய்வதாக புகைப்படம் ஒன்று வெளியானது. இதை நாதக-வினர் பரப்பியதாக கூறப்படும் நிலையில் இந்த தகவல் வதந்தி என தெரியவந்தது. இதற்கு பதிலடி தரும் வகையில் வருண்குமார் வெளியிட்ட பதிவில், "திரள்நிதி திருடன் எந்த அளவிற்கு சென்று விட்டான் பாருங்கள், மைக் முன் புலி மற்ற இடத்தில் எலி" என பதிவிட்டார். அண்மை காலமாக சீமான் மற்றும் வருண்குமார் இடையே மோதல் போக்கு நிலவுகிறது.