டயாலிசிஸ் போன்று ஒரு இயந்திரம் உடலில் இருந்து ரத்தத்தை வெளியேற்றி நரம்பு மண்டலத்தை தாக்கும் செல்களை நீக்கி, மீண்டும் ரத்தத்தை உடலுக்கு திருப்பி அனுப்பும். இந்த முறை ‘பிளாஸ்மா எக்ஸ்சேஞ்ச்’ என அழைக்கப்படுகிறது. இது மட்டுமல்லாமல் IVIg தெரபி மற்றும் ஊசிகள் தமிழக அரசிடம் கைவசம் உள்ளன. அறிகுறிகளைப் பொறுத்து நோயாளிகளுக்கு இந்த சிகிச்சை அளிக்கப்படுகிறது. நோயாளிகளின் நிலையை பொறுத்து மருத்துவமனையில் பல வாரங்கள் அல்லது மாதங்கள் கூட தங்க வேண்டிய சூழல் ஏற்படலாம்.