தமிழ்நாட்டில் மின்சாரம் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. முக்கியமாக கோடை காலங்களில் மின்சாரத் தேவை அதிகரிப்பதால் வெளிச்சந்தைகளில் இருந்து மின்சாரம் வாங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது கோடைகால மின் தேவையை சமாளிக்க வெளிச்சந்தையில் மின்சாரம் வாங்க மின்வாரியத்திற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. 8,525 மெகாவாட் மின்சாரத்தை வெளி சந்தையில் வாங்க தமிழ்நாடு மில்லா ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.