சென்னை பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில், பெண் காவலர் பாலியல் தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மேலும், “அரசின் மீதோ, காவல் துறையின் மீதோ சமூகவிரோதிகளுக்கு எந்த பயமும் இல்லை. ஒட்டு மொத்த அரசு இயந்திரமே செயலிழந்து கிடக்கிறது. இந்த நிலை தொடர்ந்தால், பொதுமக்களே தங்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய நிலை ஏற்படும். இது சமூகத்தை எங்கு கொண்டு செல்லும் என்பதை முதலமைச்சர் உணர்ந்திருக்கிறாரா?” என கேட்டுள்ளார்.