2025 ஏப்ரல் 1ஆம் தேதி முதல் நாடு முழுவதும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை (UPS) செயல்படுத்துவதற்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. யுபிஎஸ் திட்டத்தை 2024 ஆகஸ்ட் மாதம் 24ஆம் தேதியன்று மத்திய அமைச்சரவை அங்கீகரித்தது. பின்னர் நிதி அமைச்சகம் இந்த ஆண்டு ஜனவரி 25 அன்று திட்டத்தை அறிவித்தது. ஊழியரின் சர்வீஸ் 10 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் இருந்தால், ஒவ்வொரு மாதமும் குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.10,000 உத்தரவாத ஓய்வூதியம் அளிக்கப்படும்.