கரூர் மாவட்டம் குளித்தலையில் மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனை தரம் உயர்த்தப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் உள்ள மார்பக புற்று நோய் கண்டறியும் இயந்திரம் பழுதடைந்துள்ளது. இதனால் சிகிச்சைக்காக வரும் பெண்கள் ஏமாற்றத்துடன் திருச்சி செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. அரசு தலைமை மருத்துவமனைக்கு உண்டான அனைத்து உயர் மருத்துவ சிகிச்சை வசதிகளை ஏற்படுத்தி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.