பொதுப் பாதை முறைகேடு, நடவடிக்கை எடுக்க கோரிக்கை

75பார்த்தது
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கள்ளை கிராமம் மந்தியாண்டிபட்டி பிரிவிலிருந்து சரளைக்களம் என்ற களத்து வீடு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மற்றும் 10 குடியிருப்புகளுக்கு செல்லும் பொது பாதை உள்ளதாக கூறப்படுகிறது. இதை தனி நபர் ஒருவர் வருவாய்த்துறையினர் மற்றும் பதிவு துறையினரின் உதவியுடன் கூட்டு நிலங்களை முறைகேடாக பத்திரப்பதிவு செய்து கொண்டதாகவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் சுப்ரமணியன் கோரிக்கை விடுத்துள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி