கரூர் மாவட்டம் குளித்தலை அறிஞர் அண்ணா திருமண மண்டபத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் இன்று நடைபெற்றது. இதில் நகர்மன்ற தலைவர் சகுந்தலா பல்லவி ராஜா தலைமை வகித்தார். நகர்புற அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் ஷீலா, வட்டார மருத்துவ அலுவலர் சிவக்குமார் முன்னிலை வகித்தனர். இதில் வரும் முன் காப்போம் குறித்து அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இந்நிகழ்வில் அங்கன்வாடி பணியாளர்கள், சுய உதவி குழு பெண்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர். இந்த முகாமில் பல்வேறு நோய்களுக்கான மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது.