சூரியக் குடும்பத்தின் மிக தொலைவில் உள்ள நெப்டியூன் கோளை இன்று (செப்.21) இரவு இந்திய மக்கள் பார்க்கலாம். சூரியன் மேற்கில் மறைவது போல, இந்த கோள் கிழக்கில் இருந்து உதயமாகும். இந்த அபூர்வ நிகழ்வை டெலஸ்கோப் மூலம் மட்டுமே பார்க்க முடியுமாம் என்கின்றனர். அப்போது அது மிகத் தெளிவாகத் தெரியும் என விண்வெளி ஆய்வாளர்கள் கூறுகின்றனர். வளி மண்டலத்தில் இருக்கும் மீத்தேன் வாயு காரணமாக வானில் நீல நிறத்தில் நெப்டியூன் பிரகாசிக்கும் என்கின்றனர்.