கரூர் மாவட்டம், குளித்தலை ஒன்றியம் அய்யர்மலையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் ரூ. 11. 97 லட்சத்தில் கட்டி முடிக்கப்பட்ட அங்கன்வாடி மையம், வை. புதூரில் ரூ. 11. 93 லட்சத்தில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையம், மற்றும் கீழக்குட்டப்பட்டியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டம் ரூ. 11. 93 லட்சத்தில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையம் என மூன்று மையங்களை குளித்தலை எம்எல்ஏ மாணிக்கம் நேற்று ரிப்பன் வெட்டி, குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.
துவக்கி வைத்த அங்கன்வாடி மைய கட்டிடத்திற்குள் குழந்தைகள் கற்பதற்காக வரையப்பட்டு இருந்த தேசியக்கொடி, தேசியத் தலைவர்களின் படங்கள், ஆங்கில மாதங்கள், பழங்கள் மற்றும் காய்கறிகள் பெயர்கள் எழுதப்பட்டிருந்த எழுத்துக்களில் பிழைகள் இருந்ததால் கல்வியாளர்கள், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். மழலைச் செல்வங்கள் கற்றுக் கொள்வதற்காக வரையப்பட்ட வரைபடங்களில் இத்தனை பிழைகளா.? என்று கேள்வி எழுப்பினர்.
திறப்பு விழாவில் கலந்து கொண்ட குளித்தலை வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயகுமார், குளித்தலை வட்டார ஊட்டச்சத்து அலுவலர் வினோதினி ஆகியோர் அதனை கண்டும் காணாதது போல் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.