கரூர் மாவட்டம் தோகைமலை அருகே நாவல் நாயக்கன்பட்டி மற்றும் பாதிரிப்பட்டி பகுதியில் பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்துள்ளனர். தகவல் அறிந்து அங்கு சென்ற தோகைமலை போலீசார் புகையிலை விற்ற பொன்னம்பலம், ஆண்டி ஆகிய 2 பேர் மீது வழக்கு பதிந்து நேற்று கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த 91 புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.