வாடிக்கையாளர்களின் வசதிக்காக 'பாரத் கேஸ்' நிறுவனம் 24 மணி நேரமும் சமையல் எரிவாயு நிரப்பும் வகையில், ஏ.டி.எம். கேஸ் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. பெங்களூருவில் இதற்கான மையம் திறக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஏ.டி.எம். சென்று பணம் எடுப்பது போல், காலி சிலிண்டர்களில் சமையல் எரிவாயு நிரப்பலாம். சோதனை முறை ஓட்டம் வெற்றிகரமாக முடிந்ததும், நாட்டின் முக்கிய நகரங்களில் இத்திட்டம் படிப்படியாக கொண்டுவரப்பட வாய்ப்புள்ளது.