பாலிவுட் நடிகை ஸ்வேதா திரிபாதி சொந்தமாக தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கவுள்ளார். தமிழில் 'மெஹந்தி சர்க்கஸ்' படம் மூலம் பிரபலமான இவர், தி இல்லீகல், கார்கோ, ராஷ்மி ராக்கெட் போன்ற பல படங்களிலும், தி டிரிப், மிர்சாபூர், கால்கூட் உள்ளிட்ட பிரபல வெப் தொடர்களிலும் நடித்துள்ளார். ஒரு நடிகையாக, சினிமா, விமர்சகர்கள், ரசிகர்களிடம் இருந்து அபரிமிதமான அன்பு, ஆதரவு மற்றும் மரியாதையைப் பெறும் அதிர்ஷ்டம் தனக்கு கிடைத்ததாகவும், இதுவே தன்னை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதாகவும் ஸ்வேதா கூறியுள்ளார்.