யூடியூபர் ரன்வீர் அல்லபாடியா நிகழ்ச்சி ஒன்றில், பெற்றோர் உடலுறவு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார். இது பெரும் சர்ச்சையான நிலையில், அவர் மீது மகராஷ்டிரா, அசாம், ராஜஸ்தான் மாநிலங்களில் எஃப்ஐஆர் பதிவானது. இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அவரை கைது செய்ய இடைக்கால தடை விதித்த நீதிபதிகள், 'பிரபலமாக இருப்பதால் என்ன வேண்டுமானாலும் பேசலாமா? உங்கள் கருத்துக்களால் உங்கள் பெற்றோர், சகோதரி வெட்கப்படுவார்கள்' என தெரிவித்தனர்.