தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகளில் படிக்கும் 56 லட்சம் மாணவர்களில் குறைந்தது 30 லட்சம் பேர் மும்மொழி கற்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியதற்கு தமிழ்நாடு தகவல் சரிபார்ப்பகம் மறுப்பு தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள மொத்த தனியார் பள்ளிகள் சுமார்: 12,690. CBSE பள்ளிகள் வெறும்: 1,835. CBSE பள்ளிகள் தவிரக் கட்டாய இந்தி பாடம் எங்கும் இல்லை. தமிழ்நாட்டில் வெறும் 3.16 % பள்ளிகளில் மட்டுமே இந்தி கட்டாயமாக உள்ளது. எனவே தப்புக் கணக்கை உருவாக்கி பேசுவது தவறு என தகவல் சரிபார்ப்பகம் கூறியுள்ளது.