மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி குறித்து சர்ச்சையாக பேசி வன்முறையைத் தூண்டியதாக சீமான் மீது கஞ்சனூர் போலீசார் பதிந்த வழக்கின் விசாரணையை மார்ச் 26ம் தேதிக்கு ஒத்திவைத்து விக்கிரவாண்டி குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விக்கிரவாண்டி நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு கோரி சீமான் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்த நிலையில், இன்று (பிப்.18) காலை ஆஜராகி இருந்தார்.