கரூர்: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பாக காத்திருப்பு போராட்டம்

59பார்த்தது
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் பேரூராட்சி அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கிருஷ்ணராயபுரம் ஒன்றிய குழு சார்பில் காத்திருப்பு போராட்டம் இன்று(ஜன. 24) நடத்தினர். ஒன்றிய செயலாளர் நாகராஜன் தலைமையில் நீதிமன்றத் தீர்ப்பின்படி மீட்டெடுத்த அரசு புறம்போக்கு நிலத்தில் கம்பி வேலியை உடைத்து எறிந்து தனியார் ஆக்கிரமிப்பு செய்தவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், நிலத்தை மீட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வழங்கிட கோரியும் போராட்டம் செய்தனர். 

இந்த போராட்டத்தில் கிருஷ்ணராயபுரம் கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர்கள் கிருஷ்ணராயபுரம் கிழக்கு காலனி ஊர் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு போராட்டம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி