கரூரில் ஜெ. பிறந்தநாள் போட்டியில் சீறிப்பாய்ந்த குதிரைகள்.

63பார்த்தது
கரூரில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் 77வது பிறந்த நாளை முன்னிட்டு, கரூர் மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி சார்பில் 14 ஆம் ஆண்டு குதிரைப்பந்தய போட்டி, கரூரை அடுத்த அரசு காலணி பகுதியில் இன்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் சின்னசாமி, சிவபதி, எம் ஆர் விஜயபாஸ்கர், கரூர் மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் தானேஸ் (எ) முத்துக்குமார் & கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பார்வையாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

போட்டிகளை எம் ஆர் விஜயபாஸ்கர் கட்சி கொடியை அசைத்து துவக்கி வைத்தார்.

நடைபெற்ற இந்த போட்டியில் பெரிய குதிரை, சிறிய குதிரை, புதிய குதிரை என 3- விதமான போட்டிகள் நடைபெற்றது.

போட்டிகளில் கலந்து கொண்ட குதிரைகளின் சாரதிகள், குதிரைகளை லாவகமாக கையாண்டு வெற்றி பெறும் முனைப்போடு சாலையில் சீறிப்பாய்ந்திட செய்தனர்.

ஒவ்வொரு குதிரையும் போட்டி போட்டுக் கொண்டு சீறிப்பாய்ந்த காட்சிகள் பார்வையாளர்களை பரவசப்படுத்தியது.
போட்டி இலக்காக 10 கிலோமீட்டர், எட்டு கிலோமீட்டர், ஆறு கிலோமீட்டர் தூரம் என குதிரைகளின் பிரிவு வாரியாக நிர்ணயிக்கப்பட்டது.

போட்டியில் வெற்றி பெற்ற குதிரைகளுக்கு பரிசுத்தொகை & கேடயங்கள் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.

இந்த போட்டியை காண, கரூர் சுற்றுவட்டாரத்தில் இருந்து பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு போட்டிகளை கண்டு களித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி