கரூர்: பைக் மீது ஈச்சர் வேன் மோதல்

1525பார்த்தது
கரூர்: பைக் மீது ஈச்சர் வேன் மோதல்
திருச்சி மாவட்டம் முசிறி தாலுக்கா ஏவூர் கருப்பம்பட்டியை சேர்ந்தவர் மலைகொழுந்தன் மகன் ரமேஷ் (45). இவர் லாரி ஓட்டுனராக வேலை பார்த்து வருகின்றார். இந்த நிலையில் கடந்த 29ஆம் தேதி அன்று தனக்கு சொந்தமான பைக்கில் மாயனூர் அரசு மேல்நிலைப்பள்ளி சாலையில் தெற்கிலிருந்து வடக்காக சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே அதிவேகமாக வந்த ஈச்சர் வேன் மோதியதில் ரமேஷ் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்றார். பிறகு மேல் சிகிச்சைக்காக கரூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இது குறித்து ரமேஷ் அளித்த புகாரின் பேரில் விபத்தை ஏற்படுத்திய ஈச்சர் வேன் ஓட்டுநர் திருவள்ளுவர் மாவட்டம் இடையூர் பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவர் மீது மாயனூர் போலீசார் நேற்று வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி