ஒவ்வொரு நாடும் அங்குள்ள தனித்துவமான உணவு சிறப்புகளுக்குப் பெயர் பெற்றவை. சில நாடுகள் காரமான உணவுகளுக்கும், சில நாடுகள் இனிப்புப் பண்டங்களுக்கும் பெயர் பெற்றவையாக இருக்கும். அந்த வகையில், சாக்லேட் தயாரிக்கும் வரலாற்றில் அதன் முக்கிய பங்கு காரணமாக சுவிட்சர்லாந்து "சாக்லேட்களின் நிலம்" என்ற பெருமையை பெற்றுள்ளது. பால் சாக்லேட்டை உருவாக்குவதற்கு இந்த நாடு பெயர் பெற்றது. உயர்தர, சுவையான சாக்லேட்டை தயாரிப்பதற்காக சுவிஸ் சாக்லேட் தயாரிப்பாளர்கள் உலகளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளனர்.