அதிமுக தொண்டர்களின் எதிர்காலத்தை, யாரோ தீர்மானிப்பதாக அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியிருந்தார். இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி இதற்கு பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறியதாவது, “ஆடு நனைவதாக ஓநாய் கவலைப்பட வேண்டாம். அதிமுக ஒருபோதும் தன்மானத்தை இழக்காது. பட்ஜெட் கணக்கை சரியாக செயல்படுத்துங்கள், எங்களது கணக்கை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்” என கூறியுள்ளார்.