ஐபிஎல் போட்டிகளில் பேட்ஸ்மேன்களின் தலைக்கு பவுலர்கள் பவுன்சர் பந்து வீசினால் நோ பால் கொடுக்கப்படும். சில நேரங்களில், பந்து தலையின் உயரத்திற்கு செல்லும்போது கூட நடுவர்கள் நோ பால் வழங்குவது நடக்கும். இதில் ஏற்படும் சர்ச்சைகளை தடுக்க பவுன்ஸ் நோ பாலுக்கு DRS எடுக்க இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதேபோல், அவுட் சைட் ஆப் ஸ்டம்ப்புக்கும் DRS எடுக்கலாம்.