தஞ்சாவூர் மாவட்டம் மெலட்டூர் பிர்காவில் கடந்த 2024 ஆம் ஆண்டு பருவம் தவறி பெய்த கனமழையால் நூற்றுக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் பாதிக்கப்பட்டன. அதற்கு இதுவரை இழப்பீடு வழங்கப்படவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். இந்நிலையில், பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உடனடியாக உரிய இழப்பீடு தொகை வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் தஞ்சை வேளாண் இணை இயக்குநர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.