அயர்லாந்து நாட்டின் உயர் கல்வி, ஆராய்ச்சி, புதுமை (ம) அறிவியல் துறை அமைச்சர் ஜேம்ஸ் பெட்ரிக் லாலஸ் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த இச்சந்திப்பின் போது, இந்தியாவிற்கான அயர்லாந்து நாட்டு தூதர் கெவின் கெல்லியும் உடனிருந்தார். மேலும், தலைமைச் செயலாளர் முருகானந்தம், பொதுத்துறை செயலாளர் ரீட்டா ஹரிஷ் தக்கர், அயர்லாந்து நாட்டின் உயர் அலுவலர்களும் கலந்துகொண்டனர்.