கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் உணவுத்துறை பாதுகாப்பு அதிகாரிகள் நடத்திய சோதனையில், தர்பூசணி பழங்கள் விற்பனை செய்த 3 கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த தர்பூசணி பழங்களில் ஊசி மூலம் பழங்களில் ரசாயன செயற்கை நிறமூட்டிகளைச் செலுத்தி விற்பனை செய்தது தெரிய வந்தது. இதனையடுத்து அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கோடைகாலம் தொடங்கியுள்ளதால் மக்கள் தர்பூசணி பழம் வாங்கி உண்பது வழக்கம். ஆனாலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.