ரேஷன் கடை அருகே வலிப்பு ஏற்பட்டு உயிரிழந்த நபர்

76பார்த்தது
கரூர் மாவட்டம் கடவூர் தாலுகா தரகம்பட்டி ரேஷன் கடை அருகே பெயர் விலாசம் தெரியாத 35 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் வலிப்பு ஏற்பட்டு கீழே கிடந்துள்ளார். அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தபோது அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை உயிரிழந்தார். இதுகுறித்து கீழப்பகுதி கிராமம் விஏஓ தமிழரசி அளித்த புகாரின் பேரில் சிந்தாமணிப்பட்டி போலீசார் நேற்று வழக்கு பதிவு.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி